நமக்கு அனைத்து விதமான நன்மைகளையும் வெற்றிகளையும் தரக்கூடியது இந்த வெட்டி வேர் . இந்த வெட்டி வேரை ஹோமங்களிலும், யாகங்களிலும் உபயோகிப்பார்கள். அதற்கு காரணம், அதிலிருந்து எழக்கூடிய இறைசக்திக்கு அதை ஆவாகனம் செய்தால், அந்த இறைசக்தி மகிழ்ந்து வெற்றியைத் தரும் என்பதால் தான் நம் முன்னோர்கள் இந்த வேரை ஹோமங்களில் பயன்படுத்தினார்கள்.
வெட்டிவேரை நம் வீட்டில் வைத்திருந்தாலும், நம்ம வீட்டின் வாசற்படியில் கட்டி தொங்கவிட்டிருந்தாலும் மகாலட்சுமி அருள் கிடைக்கும் என்கிறது சாஸ்திரம். கெட்ட சக்திகளை விரட்டக்கூடிய சக்தி இந்த வேருக்கு உண்டு.
வீட்டில் பயன்படுத்தும் முறைகள்:
- வாரம் ஒரு முறை நம் பூஜை அறையில் வெட்டி வேரை தண்ணீரில் போட்டு விட்டு லட்சுமி மந்திரத்தை 21 முறை கூற வேண்டும். எந்த ஒரு மந்திரத்தையும் கிரகத்துக் கொண்டு, அதன் உருவை தனக்குள் வாங்கிக் கொள்ளும் சக்தி இதற்கு அதிகமாகவே உள்ளது.
- பூஜை முடிந்த பிறகு தண்ணீரில் உள்ள வேரை ஒரு மஞ்சள் துணியில் கட்டி நில வாசற்படியில் கட்ட வேண்டும்.
- பின் அந்த தண்ணீரை வீடு முழுக்க தெளிக்க வேண்டும்.
இப்படி செய்வதனால் வீட்டிற்குள் தீவினைகள் அண்டாது. வெளியிலிருந்து ஒரு கெட்ட தூசி துரும்பு கூட வீட்டிற்குள் வர முடியாது என்பது உண்மை. இதனால் வீட்டில் இருக்கும் தேவையற்ற நெகட்டிவ் எனர்ஜி வெளியேறிவிடும். கண் திருஷ்டிகள் நீங்கவும் இதை செய்யலாம்.
பணவரவு மற்றும் தொழில் விருத்திக்கு:
ஆன்மீகத்தில் பெரும் பங்கு வகிக்கும் இந்த வெட்டிவேர் பணத்தை ஈர்க்கவும் செய்யும்.
- நாம் தொழில் செய்யும் இடத்தில் ஒரு கண்ணாடி டம்ளரில் வெள்ளிக்கிழமை அன்று தண்ணீர் நிரப்பி, அதில் வெட்டி வேருடன் எலுமிச்சை சேர்த்துக்கொள்ள வேண்டும்.
- அதை பூஜை செய்யும் இடத்தில் வைக்க வேண்டும்.
- மூன்று நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் மற்றும் எலுமிச்சை பழத்தை மாற்றிக் கொள்ள வேண்டும்.
- வெட்டி வேரை மட்டும் அப்படியே வைத்திருக்கலாம்.
கண் திருஷ்டி நீங்கவும், பணவரவு தடையின்றி நடைபெறவும், தொழில் விருத்தி அடையவும் வெட்டி வேரை இந்த வகையில் பயன்படுத்த வேண்டும்.
